04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் ஏற்படப் போகிற வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் பேர்கள் அழிந்து போகலாம். மேலும், ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமாக பொருட்சேதங்கள் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தகவல் கடுமையாக எச்சரித்துள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட, முன்னேறிய செயற்கைக்கோள் வசதிகளைக் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில், மாநில நிர்வாகங்களின் கட்டமைப்பு வசதிகள் பேரிடர் ஆபத்தை உண்டு பண்ணும் வகையிலே உள்ளதாக கூறியுள்ளது. நாட்டின் 640 மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளன. கடுமையான பேரிடர் சமயங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தடுத்தல் மற்றும் குறைத்தல், பேரழிவிற்கான நிவாரணம், மறுவாழ்வு போன்றவற்றில் இத்தகைய மாவட்டங்கள் பின்னடைவில் உள்ளன. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும், நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதை, இமாச்சலபிரதேசத்தைத் தவிர மற்ற எந்த மாநிலங்களும் தனக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதிலும் குஜராத் மாநிலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிக்கையில் கூறியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,885.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



