Show all

இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் சிறந்த மாநில முதல்வராக மம்தா பானர்ஜிக்கு இடம் கிடைத்திருக்கிறது

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் நடத்திய கருத்;துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது விழுக்காடு ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதலிடம். ஆட்சி திறன், அரசியல் அறிவு, ஆட்சி முறை என்று பல காரணங்களை வைத்து இந்த விழுக்காடு கிடைத்துள்ளது. சென்ற முறை இரண்டாம் இடத்தில் இருந்த மமதா பானர்ஜி தற்போது முதல் இடம் பிடித்துள்ளார்.

சென்ற முறை முதல் இடத்தில் இருந்த நிதிஷ் குமார், இந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த முறை இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவருக்கும் பத்து விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 7விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங்கிற்கு 5விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு 5விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு 4விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு 4விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு 3விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வர் சோனோவாலுக்கு 3விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவா முதல்வர் பாரிக்கர், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோருக்கு தலா 2விழுக்காடு பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,885.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.