Show all

விக்கிபீடியாவுக்கு சீனாவில் தடை! 30 ஆண்டு கால வரலாற்றைக் கூட தம்மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்கிற நிலைபாடு.

சீனாவின் தியான்மெனில், 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை (04.06.1989)  நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த மிகப்பெரும் போராட்டத்;தை, சீனாவில் தொழிலாளர்களும், கல்லூரி மாணவர்களும், கற்றவர்களும் இப்போராட்டத்தை தலைமை தாங்கியுள்ளனர்.  22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை வரை (04.06.1989) இப்போராட்டங்கள் நடந்தன.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. பெய்ஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில் முதன்மையான போராட்டங்கள் நடந்தன, சாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

பெய்ஜிங்கில் இந்த அறவழிப் போராளிகள் மீது சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர், மேலும் பலரும் காயமடைந்தனர். உயிரிழந்த மக்கள் கணக்கெடுப்பு சீன அரசு ஆவணங்களின் படி 200-300, நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 300-800, சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000-3,000 ஆகும். இந்த வன்முறைக்கு பிறகு சீன அரசு பலரை கைது நடவடிக்கை மேற்கொண்டது. வெளிநாடு செய்தி ஊடகங்களை தடை செய்திருந்தது. சீன அரசு செய்த வன்முறையையும் ஊடகம் மீது தடை செயலையும் பல்வேறு நாடுகள் கண்டனம் செய்தன.

இந்தச் செய்திகள் எல்லாம் இணையதள தகவல் களஞ்சியமான, விக்கிபீடியாவில் உலகமொழிகள் அனைத்திலும் பதியப்பட்டிருக்கிறது.

சீனாவின் தியான்மெனில், 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை வரை (04.06.1989) நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.

இணையத் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவை அனைத்து மொழி வடிவிலும் சீனாவில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீன மொழியிலான, விக்கிபீடியா இணையதளத்துக்கு, சீனா, ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்திருந்தது. தற்போது, அனைத்து மொழிகளிலும் அதற்கு தடை விதித்துள்ளது. 

அதேபோல், பல முதன்மையான சம்பவங்கள் தொடர்பான தகவல்களுக்கும், இணையத்தளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முப்பது ஆண்டு கால வரலாற்றைக் கூட தம்மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்கிற நிலைபாடுள்ள அரசு என்ன சாதித்து விட முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,154.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.