அறிவாளர்கள் ஒதுக்குகிற சன்தொலைக்காட்சி தொடர்கள் போல, அறிவாளர்கள் ஒதுக்கிற நிகழ்ச்சியாக பிக்பாஸ் பருவங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். விதிவிலக்காக நடந்து விடுகிற சமுதாயத்தின் அசிங்கப் பக்கங்களை அரங்கேற்றுகிற சன்தொலைக்காட்சி தொடர்கள், பிரபலங்களின் அசிங்கப் பக்கங்களை வேண்டுமென்றே வெளிச்சம் போடுகிற விஜய்தொலைக்காட்சி பிக்பாஸ்; ஒதுக்கப் படவேண்டியவைகள். 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெளியுலகத் தொடர்பு இல்லாமல், பிரபலங்கள் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் 100 நாட்கள் வசித்தது மக்களுக்கு புதுமையாக இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் பருவ நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் முதல் பருவத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்தாண்டு பிக் பாஸ் பருவம் 2 ஒளிபரப்பானது. முதல் பருவம் போல் போட்டியாளர்கள் இயல்பாக இல்லை, கவனமாக விளையாடுகின்றனர், நடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப் பட்டு முதல் பருவத்திற்கு கிடைத்த வரவேற்பில் கொஞ்சம் குறைந்ததாக நம்பப் பட்டாலும், விஜய் தொலைக்காட்சி மூன்றாவது பருவத்திற்கும் வித்திட்டிருப்பதால் அவர்கள் கோணத்தில் பிக்பாஸ் இரண்டாவது பருவம் வெற்றியாகப் பார்க்கப் படுகிறது என்று நம்பலாம். அறிவாளர்கள் ஒதுக்குகிற சன்தொலைக்காட்சி தொடர்கள் போல, அறிவாளர்கள் ஒதுக்கிற நிகழ்ச்சியாக பிக்பாஸ் பருவங்கள் தயாரிக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். நல்ல பக்கங்களை முன்னெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவதை சான்றோர்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர் நம் பழந்தமிழகத்தில். தற்காலத்தில் சான்றோர்கள் இடத்தில் ஊடகங்கள் இருக்கின்றன. இந்நிலையில், அறிவார்ந்த மக்கள், தம் சமுதாயத்தை வளமையான சமுதாயமாக முன்னெடுக்க, சாராயக்கடை நடத்தி சமுதாயத்தை சீரழித்து அரசிடம் இருந்தும், மனிதர்களின் மோசமான பக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, யாரும் எதுவும் செய்யலாம் என்கிற மனோநிலையை வளர்க்கும் ஊடகங்களிடமிருந்தும் பண்பாடுகளைக் காக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. கமல் நேர்மையான தகவல்களை வெளிப் படுத்தி, இன்றைக்கு எட்டப்பர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிற, அலங்கோலத் தமிழகத்தில் அசிங்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். வரலாற்றைச் சொன்னதற்கு வழியில் யாராவது நாக்கை அறுத்து விடுவார்களோ என்று பயந்து இரண்டு நாட்கள் கருத்துப் பரப்புதல் கூட்டத்தைக் கூட தள்ளி வைத்தார். இந்த நிலையில் பிரபலங்களின் அடுத்தப் பக்கங்களை அளவில்லா வெளிச்சம் காட்டி அசிங்கப் படுத்தும் பிக்பாசின் அடுத்த பருவத்திற்கும் கமலே ஒருங்கிணைப்பாம். இரண்டாவது பருவத்தில் கமலையும் சேர்த்து நடிக்க வைத்துக் கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சி, உச்சகட்டத்தில் ஏதோ உணர்வு வந்தது போல, வெற்றியாளரை தேர்வதில் மாற்றம் கடைபிடித்தது. அதுவரையான விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் வெற்றியாளர் தேர்வு அரசியலில் பார்வையாளர்களுக்கு கமலும் சேர்ந்து நடிப்பதாக கோபம் இருந்தது. பிக்பாஸ் மூன்றாம் பருவத்தில் கமல் இரட்டை வேடம் போட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். தற்போது அரசியலில் அவருக்கு நல்ல வெளிச்சம் கிடைத்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,154.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.