ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் தனி ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றுள்ளார். காரணம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி உள்ளதாம். 21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றிப் பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அறிவிக்கை மூலம் இதை பிரகடனப்படுத்தினார். இலங்கை தலைமைஅமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே தமது கீச்சுப் பக்கத்தில், இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ரணில் கூறியுள்ளதாவது: ஒன்றிய பகுதியாக லடாக் பிராந்தியம் உருவாகிவிட்டது. 70 விழுக்காட்டிற்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி உள்ளது. லடாக் ஒன்றியப் பகுதி உருவாக்கம், மறுசீரமைப்பு ஆகியவை இந்தியாவின் உள்விவகாரம். லடாக் பிராந்தியத்துக்கு பலமுறை நானும் பயணம் செய்துள்ளேன். இவ்வாறு ரணில் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,236.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.