அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சென்னையில் இதழியலாளர் காட்சியும் சிங்கப்பூரில் சிறப்பு காட்சியும் நேற்று திரையிடப்பட்டன. இந்த இரண்டு காட்சிகளிலும் இந்த படத்தை பார்த்த இதழியலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்தை வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர் இதுவரை ஒரு எதிர்மறை விமர்சனம் கூட வெளிவரவில்லை என்பதால் இந்தப் படத்திற்கு மற்ற அஜித் படங்களை விட மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கான முன்பதிவு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையின் முதன்மை திரையரங்க வளாகங்களில் ஒன்றான மாயாஜால் திரை அரங்கில் உள்ள 16 திரைகளிலும் இந்த படம் திரையிடப்பட உள்ளது. மொத்தம் 84 காட்சிகள் முழுவதும் நேர்கொண்ட பார்வை திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது விஸ்வாசம் நல்ல வரவேற்பும், வசூல் வேட்டையும் பெற்ற நிலையில் நேர்கொண்ட பார்வை படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக சூநேர்கொண்ட பார்வை கீச்சு இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் நேர்கொண்ட பார்வையை இயக்குகிறார். அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை ‘விஸ்வாசம்’ படத்தை விட இரு மடங்கு வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இந்த முன்பதிவின் வேகத்தில் இருந்து தெரியவந்துள்ளது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,236.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



