Show all

35அ, 370 ரத்து அறிவிப்புக்கு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டமாம்! ஓர் ஊடகம்.

“ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.” இப்படி ஒரு ஊடகச் செய்தி.

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: “இந்தா பிடி தலைக்கு ஒரு சொந்த வீடு என்று ஒருவர் கொடுத்து விட்டு போக, அதை எந்த வகையிலும் பராமரிப்பு செய்யாமல் வைத்திருந்த ஒரு கும்பல் இருந்தது. திடீரென்று ஒருவர் வந்து என்னப்பா அது? எல்லோருமே ஆளுக்கு ஒரு வீடு செந்தமாக பெற்றிருக்கின்றீர்களா? உங்களால் பராமரித்து குடி போக முடிய வில்லையா? சரி சரி அதெல்லாம் கொடுங்க நான் பராமரித்துத் தருகிறேன். இனி நீங்கள் வாடகை கொடுத்து குடியிருந்து கொள்ளுங்கள்” என்று கூறி அனைவரின் வீட்டையும் இனி நான் சிறப்பாக பராமரிக்கப் போகிறேன் என்று வீடுகளை எடுத்துக் கொண்டாராம். 

இதில் தலைக்கு ஒரு வீடு கொடுத்தவர் குற்றவாளியா? அதை அப்படியே வைத்திருந்த கும்பல் குற்றமுடையதா? அந்த கும்பலிடம் இருந்து அனைத்து வீடுகளையும் எடுத்துக் கொண்ட நபர் குற்றவாளியா? என்று கேட்டு விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்குச் சென்று தலைகீழாக தொங்கத் தொடங்கி விட்டதாம். 

அதை மீட்டெடுத்து தோளில் சுமந்து கொண்டே, விக்கிரமாதித்தன் தன் பதிலை சொல்லத் தொடங்கினானாம். அப்போது காஷ்மீர் சிறப்பு தகுதி பெற்ற வரலாற்றைக் கூறி, நேற்று பாஜக முன்னெடுத்த 35அ, 370 ரத்து அறிவிப்பைக் கூறி, அதற்கு ஒரு ஊடகம் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிற இந்தச் செய்தியைக் கூறி, தலைக்கு ஒரு வீடு கொடுத்த நபர்தான் குற்றவாளி என்று முடித்தாராம் விக்கிரமாதித்தன். 

ஐயகோ! இந்திய நாட்டில் நியாயம் இப்படியெல்லாம் சொல்லப் படுகிறதா? வேண்டாம் விக்கிரமாதித்தா! இனி இந்த மண்ணுலகம் எனக்கு வேண்டாம்! நான் வேதாள உலகத்திற்கே செல்கிறேன் என்று மறைந்து விட்டதாம் வேதாளம். 
 
“ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.”

இப்படி ஒரு செய்தி வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது பாஜகவின் தவறுகளையும் கூட இட்டுக்கட்டி பெருமை படுத்தும் ஒரு ஊடகம்.
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,236.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.