Show all

நாங்கள் செய்யக் கூடாத விசயங்களை நீங்கள் மட்டும் செய்வது ஏன்: சீனா

தன் முகத்தில் தானே அறைந்துகொண்டுள்ளது இந்தியாஎன்று சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன் யுங் கூறுகையில்,

டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது என்று கூறி படைகளை குவித்தது இந்தியா. அதனால்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தை தடுத்த இந்தியா இப்போது லடாக் பகுதியில் சாலை அமைக்க முடிவு செய்துள்ளதன் மூலம்,

இந்தியா சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக, நேர் எதிர்மாறான செயல்களில் ஈடுபடுவதாக சீனா பகிரங்க புகார் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்போது மேற்கு எல்லையில், லடாக் அருகே, மார்சிம்மிக் லா முதல் லடாக் ஏரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க இந்தியாவின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது எப்படி சரியானதாகும்?

டோக்லாம் எல்லை பகுதியில் உள்ள சிக்கல்களே இன்னும் முடியாத போது, இந்தியா எப்படி லடாக் பகுதியில் சாலை அமைக்க முயற்சி செய்யலாம். இது இன்னும் இருநாடுகள் மத்தியில் உள்ள போர்ப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும்.

எனவே லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெறவேண்டும். அப்போதுதான் இருதரப்புக்கும் தீர்வு கிடைக்கும்.

என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.