ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் முன்பணம் கட்டி செல்பேசி வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வருகிறது. இந்த செல்பேசியில் ரிலையன்ஸ் செறிவட்டை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தத் திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய செல்பேசி சந்தையைப் பிடிக்கும். ஜியோ வருகைக்கு பிறகே இந்திய செல்பேசி சந்தையில் 10விழுக்காடு அளவிலான சந்தையை ரிலையன்ஸ் பிடித்துவிட்டது. இந்நிலையில், ஜியோ பேசி வருகை இந்த அளவை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனமும் 2500 ரூபாய் மதிப்பிலான 4ஜி புதிய செல்பேசியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், ஏர்டெல் நிறுவனம் இந்தச் செய்தியை இதுவரை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்கவில்லை. இந்தியாவில் தற்போது சுமார் 93 கோடி பேர் செல்பேசி வைத்திருக்கிறார்கள். இவர்களில் சுமார் 50 கோடி மக்கள் சாதாரண செல்பேசிகளே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அடிப்படையான மிடுக்குப்பேசி வசதிகளுடன் கூகுள் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான ஆண்ட்ராய்டு கோ எனும் செயலியைப் பயன்படுத்தி குறைந்தபட்ச வசதிகளுடன் மிடுக்குப்பேசி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



