இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா தனது ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 54 ரன்கள் மற்றும் ஷிகர் தவண் 49 ரன்கள் என சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததும் பின்னல் வந்தவர்கள் சரியாக அடாத்தால் இந்திய அணி 131 ரன்களுக்குள் ஏழு விக்கட்டுகளை இழந்தது. இலங்கை அணியின் ஸ்பின்னர் தனஞ்ஜயா அபாரமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இதற்க்கு காரணம். அனால் அதன் பின்னர் வந்த டோனி மற்றும் புவனேஷ்குமார் நிலைத்து நின்று ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். தோனி 68 பந்துகளில் 45 ரன்களையும், புவனேஷ் குமார் 80 பந்துகளில் 53 ரன்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்ஜயாவின் சிறப்பான பந்து வீச்சுக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



