தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அதற்கு பொருந்தும் வகையாக தங்கள் தரப்பு நியாயத்தை அமெரிக்கா சுட்டிக் காட்டுகிறது. 07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலகில் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொண்ட நாடாக அமெரிக்கா இருப்பதால்தான் இப்போதைய நேரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக வெளியே தெரிகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இதுவரை தனது நாட்டில் வாழும் 41இலட்சம் மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. இது இந்தியா உள்பட பத்து நாடுகள் தங்கள் நாட்டு மக்களிடம் நடத்திய சோதனைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக் கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து நிருபர்களைச் சந்தித்த ட்ரம்ப், பிரான்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, ஆஸ்திரியா நாடுகளில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையின் மொத்த எண்ணிக்கையைவிட அமெரிக்காவில் அதிக மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று காரணமாக 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பேட்டியில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தங்கள் நாட்டில் பாதிப்பிற்கு ஆளான அனைவரையும் கண்டறியும் பணிகளைத்தான் நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும் கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு நியாயத்துவம் பெறுவதாக அவரைக் காப்பாற்றவும் முடியும்; மறுக்கவும் முடியும். இந்தியாவில் பாதிப்பை பரிசோதனை செய்யாமல் பாதிப்பு 17656 மட்டுமே என்று குறைத்துக் கட்ட முடியும் என்பது உண்மைதான். ஆனால் மீதம் உள்ளவர்களிடம் பரிசோதனை செய்யாமலே இறப்பு நிகழ்ந்து விடுமே. ஆனால் இந்தியாவின் இறப்பு 559தானே. இறப்பு விகிதம் பரசோதனை செய்யப்பட்டவர்கள் அடிப்படையில் மூன்று விழுக்காடு தானே. பரிசோதனை செய்யாதவர்களையும் சேர்த்துக் கொண்டால் இறப்பு விகிதம் இன்னும் கூட குறையுமே. ஆனால் அமெரிக்காவின் இறப்பு விகிதம் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையிலேயே ஐந்து விழுக்காட்டைத் தாண்டுகிறது. குறைவானவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், அதற்கு போடும் கணக்கிற்கு இறப்பு விகிதம் எகிறுமே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



