Show all

எது தெரியுமா? உலகின் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கும் உலகின் முதல் பத்து மொழிகளில், முதலாவதாக இடம்பெறும் மொழி

உலகின் முதல் பத்து பழமையான மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் மொழி என்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் முதல் பத்து பழமையான மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் மொழி என்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனெனில் பழமையான மொழிகளில் இன்றைக்கும் மக்கள் பேசும் மொழியாக தமிழ் மட்டுமே இருந்து வருகிறது.

தமிழகத்தில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுக்களில் எண்பது விழுக்காட்டு கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட எழுத்துக்கள் முழுமையாகப் படிக்கப்பட்டு அது தமிழர் நாகரிகம் என்று அறியப்பட்டும் வெளிப்படுத்தப் படாமல் இருக்கிறது. அரிக்கா மேட்டிலிருந்து கீழடிவரை பல தொல்பொருள் ஆய்வுகள் தமிழர் பழமையை பறைசாற்றினாலும், தொடர்ந்து இந்திய அரசில் ஆளும் பொறுப்பிற்கு வருகின்றவர்கள் தமிழும், தமிழியலும் தங்கள் பழமை அடையாளம் என்று நிறுவவும், போற்றிக் கொள்ளவும் நேர்மையும், துணிவும், மனமும் இல்லாமல், (உலக அங்கீகாரம் பெற்ற தமிழ்!) இந்திய அங்கீகாரத்திற்காக தொடர்ந்து காத்திருக்கிறது.

உலகின் பல்வேறு ஆய்வுகள் கீழ்கண்டவாறு மொழிகளின் பழமையைப் பட்டியல் இடுகின்றன.

10 வது இடத்தில் லத்தீன் மொழி. ரோமப் பேரரசில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது தமிழ்தொடர்ஆண்டு-3025 (கி.மு.75) அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி. இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, தமிழ்தொடர்ஆண்டு-2650 (கி.மு. 450) ஆண்டு அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி. கொரியன் மொழி தமிழ்தொடர்ஆண்டு-2500 (கி.மு.600) ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி. இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி தமிழ்தொடர்ஆண்டு-3025 (கி.மு.1000) ஆண்டுகளில் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

6 வது இடத்தில் அராமிக் மொழி. அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது தமிழ்தொடர்ஆண்டு-2100 (கி.மு.1000) ஆண்டுகளில்; உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி. சீனர்களாலும், சுற்றுப் பகுதி மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, தமிழ்தொடர்ஆண்டு-1900 (கி.மு.1200) ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக். கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழ்தொடர்ஆண்டு-1650 (கி.மு.1450) ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி ஆப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, தமிழ்தொடர்ஆண்டு-500 (கி.மு.2600) ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்தொடர்ஆண்டுக்கு முன்பு 100 (கி.மு.3000) ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி. 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.