தெலுங்கான மாணவர் குழுவால் சென்னையில் ஒரு நடத்துநர் தாக்கப் பட்ட நிலையில், கடலூரில், பயணச்சீட்டு வாங்காமல் காவலர் ஒருவர் தகராறு செய்த அதிர்ச்சியில் நடத்துநர் மாரடைப்பால் மரணமே அடைந்து விட்டார். 16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர்கள், தாங்கள் குழுவாக இருக்கிற தெனாவெட்டில் சென்னையில் பேருந்து நடத்துநரிடம் தகராறு செய்துள்ளனர். தெலுங்கானா தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 56 பேர் பாண்டிச்சேரியில் நேற்று நடைப்பெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரை சுற்றி பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் அண்ணா சாலை முதல் பெரியார் நகர் வரை செல்லக்கூடிய பேருந்தில் ஏறி உள்ளனர். அப்பொழுது அந்த பேருந்தின் நடத்துனர் வின்செண்டிடம் பயணச்சீட்டு எடுக்கும்போது, கபடி வீரர்களின் பயிற்சியாளர் இலட்சுமனன் தகராறு செய்துள்ளார். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் தலையிட்டு தெலுங்கான மாணவர்களைத் கண்டித்து அமைதிப் படுத்தினர். இந்த நிலையில் எழும்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பாக கபடி வீரர்கள் இறங்கும்போது நடத்துனர் வின்செண்ட் காலில் பயிற்சியாளர் லட்சுமணன் ஓங்கி மிதித்ததாக தெரியவருகிறது. இதனால் கபடி வீரர்களுக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பயிற்சியாளர் லட்சுமணன் நடத்துனர் வின்செண்டை கடுமையாக தாக்கியுள்ளார். இதனைப்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக கபடி வீரர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த எழும்பூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பயிற்சியாளர் லட்சுமணன் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் அரசு ஊழியரை தாக்குதல் ஆகிய பிரிவின் கீழ் பயிற்சியாளர்கள் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குழுவாக இருப்பவர்கள் தெனாவெட்டாக சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்துகிற முயற்சி. அடுத்து வருகிற ஒரு செய்தி அதிகாரத்தில் இருப்பவர்கள் தெனாவெட்டாக சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்துகிற முயற்சி. இந்த தெனாவெட்டு அதிர்ச்சியில், மாரடைப்பால் பேருந்து நடத்துனர் இறந்தே போனது பெருஞ்சோகம். கடலூர் அருகே பயணச்சீட்டு வாங்காத காவலருடன் இன்று வாக்குவாதம் செய்த பேருந்து நடத்துநர் மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில், பேருந்தில், இயல்பு உடையில் இருந்த காவலர் பழனிவேலிடமும் பயணச்சீட்டு வாங்கும்படி கேட்டுள்ளார் பேருந்து நடத்துனர். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென நடத்துனர் கோபிநாத் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் காவலர் பழனிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,263.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.