Show all

அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் இரு தலைவர்கள் சந்திப்பு! ஆம்; இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆம்; அடுத்த மாதம் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுகிறார்கள்.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது.

சீனா சுற்றுப்பயணம் சென்றிருந்த தலைமைஅமைச்சர் மோடி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துவிட்டும் வந்தார் மோடி. 

இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்ற சீன அதிபர் 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (11.10.2019) இந்தியாவுக்கு வர இருக்கிறார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை டெல்லியில் வைத்து சந்தித்து பேசுவது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. 

சீன அதிபரை பிரதமர் மோடி சந்திப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகள் சென்னை, விசாகப்பட்டிணம், ஐதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களை பட்டியலிட்டனர். அதில் மோடி தேர்ந்தெடுத்தது சென்னையை ஒட்டி உள்ள மாமல்லபுரம். பல்வேறு பழமைச் சின்னங்களும், பல்லவர் கால சிலைகளும் உள்ளதாலும், கடற்கரை நகர் என்பதாலும் மாமல்லபுரத்தை பேச்சுவார்த்தை நடத்த தேர்வு செய்துள்ளார் மோடி. மேலும் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் ராணுவக் கண்காட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையுடன் சீனா நெருக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள தமிழகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற மோடி எதன் பொருட்டு ஒப்புக்கொண்டிருந்தாலும் சரி- இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் வேளையில், தமிழகம் குறித்து உலகினர் தேடுவது அந்தக்கால கட்டத்தில் தலைப்பாவது, தமிழர்தம் பெருமைக்கானதாக அமையும் என்று தமிழ்ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.