முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையான நிலையில், முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண் அரசிடம், ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது 03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூற்றி இருபத்தி நான்கு நாட்;களுக்கு முன்பு: சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் தீமைகளை கருத்துப் பரப்புதல் மூலம் தீவிரமாக முன்னெடுத்தவருமான முகிலன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அன்று இரவு எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த அவரை அதன் பின்னர் காணவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறையினரை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவர் வெளியிட்ட காணொளியில் இருக்கும் நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, எழும்பூர் தொடர்வண்டித்துறை காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர். இந்தப் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது. முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது வழக்கை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண் அரசிடம், ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,187.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.