தமிழ்வாழ்க! எனக் கூறி உறுதிமொழி எடுத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும், அதையொட்டி #தமிழ்வாழ்க என்பது கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கப் பட்டதும், நமக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஆனால் அதே வேளை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ்வாழ்க! முழக்கத்திற்கு எதிராக பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டது வெறுப்பு அரசியலின் உச்சமாக, மக்களவையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று பாராளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்வாழ்க! முழக்கத்தோடு தமிழில் உறுதிமொழி அளித்து பதவியேற்றனர். இந்தியாவின் பல்வேறு மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தங்கள் மொழிகளில் உறுதிமொழியளித்து பதவியேற்றனர். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்வாழ்க என்ற முழக்கத்தோடு பதவியேற்ற போதுமட்டும், பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீ ராம் என பாஜகவினர் எதிர் முழக்கமிட மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களவையில் தற்காலிக பேரவைத்தலைவர் வீரேந்திரகுமார் முன்னிலையில் பதவியேற்றனர். அப்போது பதவியேற்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்த போது தமிழ்வாழ்க! என்ற முழக்கத்தோடு பதவியேற்றனர். தமிழ் வாழ்க என்று அடுத்தடுத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி பதவியேற்றதால் ஆத்திரமடைந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் முழக்கமிட்டனர். அப்போது பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,187.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.