அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்- ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் 04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதாவது: நேற்று அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 மி.மி அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை ஒரு சில இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது வானிலை ஆய்வு மையம். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதாலும், தென்மேற்கு பருவமழை இன்னும் தமிழக- கேரள எல்லைப்பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதாலும், கடல்காற்று வீசாமல் இருப்பதாலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசிவருகிறது. கடந்த கிழமை இரவு 10 மணி வரை சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானதிற்கும் இது தான் காரணம். வடக்கு தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், சென்னை, காஞ்சி, கூடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை, பெரம்பலூர், கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று மிகவும் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்புகள் இல்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,188.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.