29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார். ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது. இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். இதனிடையே ஒண்டாரியோ சட்டமன்றத் தேர்தலில் விஜய் தணிகாசலத்தின் கட்சியான முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மேலும், ஆட்சியைப் பிடித்த முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டக் போர்டு, தமது கட்சியின் இளம் வேட்பாளரான விஜயின் வெற்றிக்கு தம்முடைய பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார். ஒண்டாரியோ மாநில சட்டமன்றத்துக்கு தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் திருக்குறளின் மீது ஆணையிட்டு தம் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்பது உலகத் தமிழர் அனைவருக்குமான பெருமிதமாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



