Show all

9000சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜான்சன்மற்றும்ஜான்சன் 4700000000 டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடக்கத்தில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிசௌரி மாகாண அறங்கூற்றுமன்றத்தின் அறங்கூற்றுவர், தண்டிக்கும்படியான சேதங்களை ஏற்படுத்தியதற்காக கூடுதலாக 4.1 பில்லியன் டாலர் அபராதம் விதித்தார்.

மருந்துத் துறை பெரும்புள்ளியான ஜான்சன் மற்றும் ஜான்சன், பிரபலமான தனது குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் தொடரப்பட்ட சுமார் 9,000 சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.

ஆறு கிழமைகால விசாரணையில், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் பிற பவுடர் பொருட்களைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோயை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த வழக்குத் தொடுத்த 22 பெண்களில் 6 பேர் கருப்பை புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டனர்.

தனது நிறுவனத்தின் பவுடரில் கலந்திருக்கும் அஸ்பெஸ்டாஸ் ஆபத்தானது என்று ஜான்சன் மற்றும் ஜான்சன், நிறுவனத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்த போதிலும், அதன் அபாயங்களைப் பற்றி இந் நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.