Show all

அடடே நம்ம ஊருக்கு எப்போது வரும்? அமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லிப்ட் என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய தேவை இல்லையாம்.

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூற்று தொன்னூற்று ஆறு கிலோ எடை கொண்ட ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய இலகு ரக விமானம் அரசு அனுமதியோடு டெக்சாஸ் மாகாணத்தில் சோதித்து பார்க்கப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லிப்ட் என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒற்றை இயக்கும் இயந்திரம்  கொண்ட ஹெக்சா என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.


சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்துள்ள லிப்ட் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருவதாக கூறியது.

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கன நடவடிக்கையாக நம்ம மோடிக்கு இந்த விமானம் ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டால் அவர் பாட்டுக்கு உலகை சுற்றி வருவாரே என்ற நையாண்டி இணையத்தில் தொடங்கப் பட்டு விட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,217.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.