இரு சக்கர வாகனத்தில், நாம் பயணிக்கும் வழியாக செல்லும் பயணிகளை, நமது வாகனத்தில் அழைத்துச் சென்று வருமானம் பார்ப்பதற்கு, ராபிடோ செயலி மூலமாக, ஏற்பாடு செய்து தருவதை, ராபிடோ நிறுவனம், சட்டப் பாதுகாப்பில்லாமல் முன்னெடுத்து வருகிறது. ராபிடோ செயலி மூலமாக, இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. இந்தச் செயலி மூலமாக பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாமென்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற விவரங்களை அளித்து, ராபிடோ தலைவர் ஆக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இவர்களுக்கு ராபிடோ நிறுவனம் இவர்கள் பயணிக்கும் வழியாக செல்லும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்து தரும். ஒவ்வொரு பயணத்துக்கும் குறைந்தபட்சம் 20 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் பலரும் தங்களை இதில் இணைத்துள்ளனர். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு ராபிடோ நிறுவனம் செயல்படுகிறது. ஓலா, உபெர் போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயணச் சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன பைக் டாக்ஸி சேவையை ராபிடோ அளிக்கிறது. இதற்காக பதிவுக் கட்டணமாக 10 ரூபாயும், கி.மீ.க்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பயணம் ராபிடோ செயலி மூலம் முன்னெடுக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிப்படி மஞ்சள் நிற எண்பலகை வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு மஞ்சள் நிற எண்பலகை வைக்கும் நடைமுறை தமிழகத்திலேயே இல்லை. சென்னை நகர் முழுவதும் வலம் வரும் ராபிடோ வாகனங்கள் வெள்ளை நிற எண்பலகையுடன் பறக்கின்றன. இது சட்டத்துக்குப் புறம்பானதாகக் கருதப் படுகிறது. இதே குற்றச்சாட்டு காரணமாக ராபிடோ நிறுவனம் பெங்களூரில் தடை செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. அண்மைக்காலமாக ராபிடோ செயலி மூலமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு இல்லை. தவிர, ராபிடோ வாகன ஓட்டிகளாக இருப்பவர்கள் யார், அவர்களுக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா போன்ற விவரங்கள் அந்நிறுவனத்திடமே இல்லை. அந்த வாகனங்களில் போதை மருந்துகள், கஞ்சா கடத்தப்பட்டால்கூட யாருக்கும் தெரியாது. சிலர் எண்பலகை கூட இல்லாமல் ராபிடோ வாகனத்தை இயக்குவதாக புகார் வந்துள்ளது. பொதுமக்கள் இந்த ராபிடோ செயலி மூலமாக பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். காவல்துறையினரிடம் சிக்கிய வாகனங்கள் அனைத்தும், ராபிடோ தலைவராகச் செயல்பட்டவர்களுக்குச் சொந்தமானது. இவ்வாகனங்களை மீட்க ராபிடோ நிறுவனம் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வருமானத்துக்கு ஆசைப்பட்டு ராபிடோவில் தலைவராகச் சிக்கிக் கொண்டவர்கள், வாகனத்தை இழந்து செய்வதறியாது நிற்கின்றனர். ராபிடோ செயலியைத் தடை செய்யக்கோரி கடந்த கிழமை சென்னையில் தமிழ்நாடு கால்டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,217.
இவ்வாறு இயக்கப்படும் இந்த வாகனங்கள் குறித்து போக்குவரத்து காவலர்களுக்குப் புகார்கள் குவியவும், நேற்று நடைபெற்ற அதிரடி வாகன தணிக்கையில் 37 ராபிடோ வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



