கடந்த மாதத்தில், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் தொடர்வண்டிகள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, 25 புல்லட் தொடர்வண்டிகளின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. மின்கோளாறுக்கு காரணம் ஒற்றை நத்தையாம். 11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதத்தில், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் தொடர்வண்டிகள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, 25 புல்லட் தொடர்வண்டிகளின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்த நிலையில், புல்லட் தொடர்வண்டி சேவை பாதிப்புக்கு ஒரு நத்தைதான் காரணமாக இருந்திருக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணம் குறித்து புல்லட் தொடர்வண்டி ஊழியர்கள் ஆராய்ந்தபோது, தொடர்வண்டி பாதைக்கு தொடர்புடைய மின்னணுக் கருவியில் உயிர் இழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டனர். கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்னணுக் கருவியை கடக்க முயன்றபோது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் மின்சாரம் தடைப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் கூட நிறுத்த முடியாத ஜப்பான் புல்லட் தொடர்வண்டிச் சேவையை ஒரு நத்தை நிறுத்திவிட்டதே என்று வியக்கிறது ஜப்பான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,195.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.