Show all

மதுரை மாணவி நேத்ராவிற்கு நமது வாழ்த்துக்களையும் உரித்தாக்கிப் பெருமை கொள்வோம்! கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பேசுபொருளாகி வருகிறார்

மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால் பாராட்டப்பட்டார். 

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால் பாராட்டப்பட்டார். 

இந்நிலையில், இவரது மகள் நேத்ரா அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பான UNADAP இல் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பேச அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது

 இந்நிலையில், மோகனும், இவரது மகள் நேத்ராவும், நேற்று முதல் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பேசுபொருள் ஆகியிருக்கின்றார்கள். மதுரை மாணவி நேத்ராவிற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்ததோடு கல்வி செலவை அரசே ஏற்கும் என உறுதியும் அளித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு கொரோனா தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவரின் மகள்  நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்காலப் படிப்பிற்கு சேமித்துவைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.