ஒரு கிழமையில் 61 ஆயிரம் பேர் பாதித்துள்ள நிலையில் வணிக வாளாகங்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதை கைவிடுங்கள் என்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உயிருக்கு பாதிப்பு அளிக்கும் வாய்ப்பு உடையது கொரோனா தொற்று என்றால், மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கான நடப்பு மூலதனத்திற்கு பாதிப்பு அளிக்கும் கொரோனாவை விட கொடூரமான நோய் ஊரடங்கு. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உயிர் பெரிதா? உடைமை பெரிதா? என்று பட்டிமன்றம் நடத்தக்கூடாது. உலகவங்கியில் இருக்கிற கடனோடு இன்னும் கொஞ்சம் கூடுதல் கடன் வாங்கிக் கூட உடைமைகளுக்கு உரிய நிவாரணம் அரசுகள் வழங்கும் என்றால் மக்கள் மகிழ்ச்சியாக ஊரடங்கை முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களின் விலை கொடுப்பில் முன்னெடுக்கிற ஊரடங்கிற்கு, அரசுகள்- உயிர் பெரிது என்று தீர்ப்பு வழங்குவதில் பொருள் இருக்க முடியாது. கொரோனா என்பது பாதிப்பிற்கான வாய்ப்புதான். அதிலிருந்து விலகிடவும், வந்தாலும் சிகிச்சை மேற்கொள்ளவும் வழிகள் உள்ளன. மக்களின் நடப்பு மூலதனத்திற்கு வினாடிக்கு வினாடி, மீள முடியாத பாதிப்பு அளிக்கக் கூடியது ஊரடங்கு ஆகும். வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்று ஊரடங்கை கடைப்பிடித்தால், கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரவே முடியாது. ஊரடங்கில் தனிமனிதர்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக தளர்வு கொடுக்கலாம். ஆனால் நாம் பைக்கில் தனிமனிதர்களாகச் சென்றவர்களையெல்லாம் தோப்புக்கரணம் போடவைக்கிற அளவிற்கு ஊரடங்கைக் கடைபிடித்த பெருமைக்குரியவர்கள். இப்போது கும்பல் கும்பலாக கூடிக்கலைகிற வகையான வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்குத் தளர்வு தர முனைகின்றோம். உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ள நிலையில் அடுத்த கிழமையிலிருந்து வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று பரவல் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா 6-வது இடத்தைப் பிடித்தது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 887 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 294 பேர்கள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு கிழமையாக தொடர்ந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 3 நாட்களாக 9 ஆயிரத்துக்கு அதிகமாகவும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு கொண்டு வந்த காலத்திலிருந்து 4-வது கட்டம் வரை சீரான வேகத்தில் பாதிப்பு அதிகரித்தே வந்துள்ளது ஊரடங்கை தனிமனிதர்கள் மீது கடுமையாகத் திணிக்கவும், கூட்டமாக ஊரடங்கை தளர்த்திக்கொள்வதற்கு வாய்ப்பாகவுமே, ஊரடங்கை அரசுகள் முன்னெடுத்து வந்திருக்கின்றன. இதில் நடுவண் பாஜக அரசு மிகமிகக் கேவலம். ஊரடங்கை அதிகாரிகளிடம் கையளித்ததோடு சரி. நிவாரணங்கள் குறித்து யோசிக்கவேயில்லை. முதல்கட்ட ஊரடங்கில்- 10 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டனர். வழிபாட்டுத் தலங்கள், வணிகவளாகங்கள், வான்வழிப் போக்குவரத்துகள், தொடர்வண்டிகள், பேருந்துகள். சுற்றுலா தளங்கள், மது உள்ளிட்ட கேளிக்கைகள் போன்றவற்றை திறக்க அவசரம் காட்ட வேண்டிதில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வந்துகொண்டிருக்கும் நிலையில் அவற்றை செயல்படுத்துவதை தவிர்க்கலாம். ஒருவேளை நோய் தொற்று அதிகரித்து கைமீறிச்சென்றால் மீண்டும் முழுமொட்டைக்கு (பொதுஊரடங்கு) சிந்திக்க வேண்டியது இருக்கும் என்பதாக வருத்;தம் தெரிவிக்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். தமிழ்முன்னோர்கள்- சொலவடைகள் மூலம் எக்காலத்திற்கும் தெளிவான தீர்வுகளை நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள். தயவு கூர்ந்து அரசுகள் ஊரடங்கை ஒட்டுமொத்த மக்களையும் மொட்டையும் ஆக்க வேண்டாம். அனைவருக்கும் குடுமியும் வைக்க வேண்டும்.
2-வது கட்ட ஊரடங்கில்- 31 ஆயிரத்து 094 பேர் பாதிக்கப்பட்டனர்.
3-வது கட்ட ஊரடங்கில்- 53ஆயிரத்து 636 பேர் பாதிக்கப்பட்டார்கள்.
4-வது கட்ட 85 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டனர்.
இரண்டு கிழமைகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது. இந்த ஒரு கிழமையில 47 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக கடந்த ஒருவாரத்தில் மட்டும் 60 ஆயிரத்து 971 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்துள்ளது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



