பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருபுறம் நோபாளம் மற்றும் சீனா எதிர்ப்பு காட்டவே, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல் நிகழ்ந்துள்ளது. 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இந்த எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் சீனா மற்றும்பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. அங்குள்ள பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி தங்களுக்கானது என்று ஒருபுறம் நோபாளம் எதிர்ப்பு காட்டவே, சீனாவும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு காட்ட, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல் நிகழ்ந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக இரு தரப்பும் தமது வலிமையை காட்டும் வகையில் இராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் குவித்துள்ளன. மோதல் நிகழும் பகுதியையொட்டி தமது எல்லைக்குள் சுமார் 5,000 வீரர்களையும் அதற்கேற்ப பீரங்கி உள்ளிட்ட தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது. இந்தியாவும் அதற்கு சவால்விடும் வகையில் சீனாவைவிட அதிகஅளவில் படைகளை குவித்துள்ளதுடன் இராணுவ தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக, லெப்டினன்ட் ஜெனரல்கள் நிலையில் இன்று கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் லடாக் பகுதியில் நிகழ்ந்த மோதல்பாடு குறித்தானதாகத் தெரியவருகிறது. இந்தக் கலந்துரையாடலில் இந்தியா தரப்பில் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் 14 பேரும், சீன ராணுவ கமாண்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். சீனா கட்டுப்பாட்டு எல்லை அருகே மோல்டோவில் நடந்த கலந்துரையாடல் முடிவுற்றதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல் முடிந்து இந்திய தரப்பினர் லே பகுதிக்கு திரும்பியுள்ளனர். எனினும் இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



