ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் மக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்; என்று எச்சரித்துள்ளன. ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதாகக் கூறிய, குழப்பமான நடவடிக்கை குறித்து மக்களை அரசு மக்களை அணுகவில்லை என்று சாடியுள்ளார். அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து நடுவண் அரசு மக்களிடையே எந்த விளக்கமும் இன்னும் கொடுக்கவில்லை என்றும் என்று கீச்சுவில் பதிவிட்டுள்ளார். காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் யுகங்கள் அனைத்தும் வதந்திகளே. நாளை என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது, அது என் கைகளில் இல்லை; ஆனால் இன்றுவரை கவலைப்பட ஒன்றுமில்லை என்று ஆளுநர் சத்யபால் மாலிக்கும் தனது யுகத்தைத் தெரிவித்துள்ளார். ஜெர்மனி தனது நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசாங்கத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காஷ்மீரில் நமது நாட்டு மக்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் உடனே வெளியேற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கம், நீங்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்தால், விழிப்புடன் இருக்க வேண்டும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அரசாங்கம் தரப்பில், காஷ்மீருக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் உரிய பாதுகாப்புடன் செல்லுங்கள். ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,233.
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீரில் மோசமான சூழல் நிலவிவருகிறது. அங்கே அளவுக்கு அதிமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரை மூன்றாகப் பிரிக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஹிந்துக்;கள் அதிகம் வசிக்கும் ஜம்முவை தனி மாநிலமாகவும், இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரையும், பௌத்தர்கள் பகுதியும் இசுலாமியர்கள் மிகுதியும் வசிக்கும் லடாக் பகுதியையும் ஒன்றியப் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை விடுதலைநாளன்று மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவர தடுப்புப் பிரிவு காவலரும் ஸ்ரீநகரின் முதன்மை இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.