Show all

சீனா போருக்குத் தயாராகிறது! யாருடன் போர்? பலவகை ஊகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன

போருக்கு தயார் ஆகுங்கள். சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு, இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். 

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: போருக்கு தயார் ஆகுங்கள் என்று சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். 

சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முதன்மையான இராணுவப் படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார். 

இதில் பல முதன்மை பாடுகள் குறித்து ஜி ஜிங்பிங் பகிர்ந்து கொண்டார். அதில், சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார் ஆக வேண்டும். அவர்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும். 

போருக்கான ஆயத்தங்களை இராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். நாம் கொரோனாவை வென்றுவிட்டோம். இதற்கு இராணுவத்தின் தீவிரமான செயல்படும், இராணுவத்தை மையமாக கொண்ட ஆட்சியும்தாம் காரணம். அதை நாம் தொடர வேண்டும். நாம் மாறுபட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு இராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். 

அவர் தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் கூறவில்லை. இந்தியாவிற்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. அதேபோல் மற்ற நாடுகள் குறித்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவிற்கு எதிராக தைவான் புரட்சி செய்து வருகிறது. சீனாவிற்கு உள்ளேயே ஹாங்காங் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது. மேலும் தென் சீன எல்லையில் மலேசியா, அமெரிக்கா சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இப்படி பேசி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 

நேபாளத்திற்கு ஆதரவாக இந்தியாவோடு போர் தொடங்கவும் வாய்ப்பு இருக்கலாம் என்று நமது நாட்டில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவர் செல்வதற்காக, உத்தராகண்ட்டில் இருந்து லிபுலேக் பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை இரண்டு கிழமைகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் கலி ஆற்றின் மேற்குப் பகுதியில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தச்சாலை அமைத்த பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்று சில நாட்களாக இந்தியாவோடு நேபாளம் சிக்கலில் ஈடுபட்டு வருகிறது. இதில் சீனா நேபாளத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், நேபாளத்திற்கு ஆதரவாக இந்தியாவுடன் சிறிய எல்லைப் போர் தொடங்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதை நிரூபிக்கும் வகையாக இந்தியா- சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீனா இராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 நாட்களாக இந்திய சீனா எல்லைப் பகுதிகளான பன்காங் டிஸோ ஏரி, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் டவுலட் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் இந்திய, சீனா படையினருக்கிடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்திய, சீனா படைகளுக்கிடையே நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததிலிருந்து எல்லைப் பகுதிகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவிய சீன இராணுவம், இந்தியப் பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் கட்டுமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி கொடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் தற்போதுள்ள நிலையைத் தொடர வேண்டும் என்று இந்தியா சார்பில் சீனாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சீனா மறுத்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், லடாக் எல்லைப் பகுதியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கூர்ந்து கவனித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் எல்லையிலுள்ள சூழல் குறித்து அதிகாரிகள் விளக்கியிருந்தனர். இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தளபதிகளுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதனால் எல்லைப் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. என்றும் தெரியவருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.