Show all

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புதல் வாக்குமூலம்! பொது ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு

நடுவண் அரசு அதிகாரப்பாடாக அறிவித்த பொது ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக அமைந்தது அவரது மறுப்பு. 

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு தோல்வியடைந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு நடுவண் தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்து பதிலளிக்கும் முயற்சியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொரோனா நுண்ணுயிரி பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக நடுவண் பாஜக அரசை சாடியிருந்தார் ராகுல் காந்தி. அதிகாரப்பாடாக ஊரடங்கை அறிவித்த நடுவண் அரசு மக்களின் ஊரடங்கு பாதிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மாநில அரசுகள்தாம் கொரோனாவிற்கு எதிராகவும், ஊரடங்கு பாதிப்பிற்கும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும், மாநில அரசின் அதிகாரங்ளை நடுவண் பாஜக அரசு பிடுங்கி வைத்துக் கொள்ளாமல் மாநில சுயாட்சி நடைமுறையில் இருந்திருக்குமானால் இன்னும் சிறப்பாக மாநிலங்கள் செயல்பட்டிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடுவண் பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 
பா.ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார். சரி அதைத்தான் இராகுல் மாநில சுயாட்சி என்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிற நிலையில் இந்த பாஜக கூட மக்களுக்கு ஏதாவது செய்கிறது என்பதுதான் உண்மை. நீங்கள் மாநில அமைச்சர் இல்லையே நீங்கள் மாநிலத்தின் செயல்பாடுகளை உங்கள் மீது எப்படி ஏற்றிக் கொள்ள முடியும்? 

இந்தியாவின் வங்கிகளிலிருந்து நிறைய நிறைய அள்ளிக் கொண்டு போன பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ததைத் தவிர ஏழைகளுக்கு- நீங்கள் நடுவண் அமைச்சராக யார் கணக்கில் எவ்வளவு போட்டீர்கள் என்பதைத்தானே இராகுல் எதிர்பார்க்கிறார் என்று அவருக்கு தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.