Show all

ரூபாய் 11700க்கு 43அங்குல மிடுக்குத் தொலைக்காட்சி! விரைவில் இந்தியாவில். சியோமி நிறுவனத் தயாரிப்பு

சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.

சியோமி நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது. அங்கு அதன் விலை, இந்திய மதிப்புப்படி 11,700 ரூபாய் ஆகும். அது சீனா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தத் தொலைக்காட்சியை இந்தியாவில் வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தொலைகாட்சி 2ஜிபி ரேமும், 8ஜிபி நினைவகமும் கொண்டதாகும். 

மற்ற மிடுக்குத் தொலைக்காட்சியைப் போலவே, இதிலும் வைபை வசதி உள்ளது. ஆனால், ப்ளூடூத் வசதி கிடையாது. அதனால் வழக்கமான சியோமி தொலைக்காட்சியில் வரும் மிடுக்கு ரிமோட்க்கு பதில் இன்ப்ரா ரெட் ரிமோட் வழங்கப்படுகிறது.

இந்தத் தொலைக்காட்சி ஆண்ட்ராய்டு தொலைக்காட்சியின் அடிப்படையான பேட்ச்வால் இன்டர்பரன்ஸ் மூலம் இயங்குகிறது. இதனால் அதில் பல உள்ளடக்கங்கள் (கன்டென்ட்) இருக்கும். அதாவது கூகுள், நெட்பிளீஸ், போன்றவை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.