28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சில் மேற்கு பகுதியில் புய் டு பவ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இங்கு வரும் பொதுமக்களில் சிலர் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் போடாமல் சென்று விடுகின்றனர். இதனை தொடர்ந்து சுற்று சூழலை காப்பதற்காக பூங்கா நிர்வாகத்தினர் புதிய முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து உள்ளனர். அவை பூங்காவை சுற்றியுள்ள சிகரெட் துண்டுகள் மற்றும் சிறிய அளவிலான குப்பை பொருட்களை எடுத்து வந்து பெட்டி ஒன்றில் போடுகின்றன. அவற்றின் நல்ல செயலுக்கு பரிசாக அதில் இருந்து உணவு பொருட்கள் வெளிவருகின்றன. இதற்காக 6 காகங்கள் பயிற்சி பெற்றுள்ளன. அவற்றில் சில தங்களது பணியை தொடங்கி விட்டன. அடுத்த கிழமை மீதமுள்ளவையும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளன. காகங்கள் புத்திசாலியானவை. சரியான சந்தர்ப்பங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் அவை விளையாட்டின் வழியே அவர்களுடனான உறவை நிலைநிறுத்தி கொள்கிறது. இதுபற்றி பூங்காவின் தலைவர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் கூறும்பொழுது, எங்களது நோக்கம் தூய்மைப்படுத்துவது என்பதுடன் நின்று விடவில்லை. ஏனென்றால் பொதுவாக இங்கு வரும் மக்களில் பலர் தூய்மையாக இருப்பதில் கவனமுடன் உள்ளனர். ஆனால், சுற்று சூழலை காக்க வேண்டும் என்பதில் இயற்கை கூட நமக்கு கற்று தருகிறது என்பதனை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டோம் என கூறியுள்ளார். தமிழர்கள் காக்கைக்கு சோறு வைத்து நட்பு கொண்டாடினர். இவர்கள் காக்கையை ரொட்டித் துண்டு கொடுத்து வேலை வாங்க பழக்கியுள்ளனர். இவற்றோடு- நம்ம மோடி, சோறும் வைக்காமல், ரொட்டித் துண்டும் கொடுக்காமல், காக்கை என்ன மக்களையே, கழிப்பிடம் கட்டி ஆய் போங்கள் என்று தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப் படுத்தியதை ஒப்பு நோக்கி, நாம் இந்தியர் என்பதில் இழிவு கொள்ளலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,878.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



