28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுக சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்: (!) தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (!) இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக போட்டியிட்டு வெற்றிபெறும். (!) இந்த மாத இறுதிக்குள் உறுப்பினர் சேர்க்கை குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படும். 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்புகிறேன். (!) கூட்டணி குறித்து தற்போது ஆலோசிக்கவில்லை. நிறைய கட்சிகள் எங்கள் வளர்ச்சியை கண்டு வியந்துள்ளனர். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. (!) எம்ஜிஆருக்கு கொடுத்தது போல், திமுக தலைவர் கருணாநிதிக்கும் பாரத ரத்னா விருது உரிய நேரத்தில் அவர்களே கொடுப்பார்கள். (!) மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழகத்தில் தற்போதைய தமது நிலைபாட்டைத் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,878.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



