கொரோனா இருப்பவர்களைக் கண்டறியாமலே, வெளியே நடமாடவிட்டுக் கொண்டு, கொரோன ஒழிப்பு சாத்தியமில்லை என்கிறது உலகநலங்கு அமைப்பு. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா இருப்பவர்களைக் கண்டறியாமலே, வெளியே நடமாடவிட்டுக் கொண்டு, கொரோன ஒழிப்பு சாத்தியமில்லை என்கிறது உலகநலங்கு அமைப்பு. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா சோதனை படிப்படியாக அதிகரிக்கப்பட்டே வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நுண்நச்சு தொடர்பான நேற்றைய விவரங்களை மாநில நலங்குத்துறை வெளியிட்டது. அந்த தகவலின் படி மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 1141 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க பரிசோதனையின் எண்ணிக்கை முதன்மைக் காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆயிரத்து 736 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 443 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நுண்நச்சுப் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் குணமானவர்கள் 1,017 பேர்கள் ஆவர். இவர்களோடு தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், நுண்நச்சுத் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



