கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நடுவண் பாஜகவோ அரசுக்கு- கொரோனா போச்சு சீனாவே பேச்சு என்ற போக்கில் உள்ளது. 04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம், நாங்கள் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம், நியூசிலாந்து போன்ற நாடுகள் நாங்கள் கொரோனவை விட்டு வெளியிலேயே வந்து விட்டோம் என்று கொரோனா கொரோனா என்றே போராடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா பாதிப்பில் இந்தியாவை உலகின் நான்காவது இடத்திற்கு கொண்டுவந்து விட்ட நடுவண் பாஜக அரசோ:- இந்திய மக்கள் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் இழந்து சோற்றுக்கே வழி இல்லாது இருக்கிற நிலையில், இந்திய மக்களுக்குச் சீனப் பொருட்கள் வாங்க எங்கே காசு இருக்க முடியம் என்றுகூட சிந்திக்காமல், இந்த இக்கட்டான நிலையில் மக்கள் வறுமை போக்க எந்த வகையிலும் உதவ வக்கில்லாத நடுவண் பாஜக அரசின் அமைச்சர் அந்த வகைக்கு ஏதும் உதவ முயலாமல் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் லடாக் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலும் சீனாவிற்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடுவண் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், மக்கள் அனைவரும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் அன்றாடம் பயன்படுத்தும் சீன அரசின் தயாரிப்புகளை நிறுத்த வேண்டும். தற்போது சைனீஸ் உணவுகளை விரும்பி உண்கின்றனர். அதனை தவிர்க்க வேண்டும். சீன பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார். அவருக்கு மோடி திறந்து வைத்து உலகின் மாஉயரப் படேல் சிலை சீனத் தயாரிப்பு என்று தெரியாதோ என்னவோ.
லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதலில், தமிழ்நாட்டு இராணுவ வீரன் பழனி உள்ளிட்ட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் வீரர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



