இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொள்ள இங்கிலாந்து உயர்அறங்கூற்று மன்றம் அறிவித்த நாளுக்கு இன்னும் 206 நாட்கள் உள்ளன. 03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத வகைக்காக, அவருக்கு எதிராக நடுவண் குற்றப்புலனாய்வுத் துறையும் அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் மல்லையா இலண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியா அளித்த புகாரின்பேரில், இரண்டு ஆண்டுகளுக்க முன்பு அவரை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் உடனே பிணையில் விடுவிக்கப்பட்டார். விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அறங்கூற்றுமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த அறங்கூற்றுவர் எம்மா அர்புத்நாட், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பு அளித்தார். இந்த உத்தரவுக்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீது ஒப்புதல் அளித்தார். உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, லண்டன் ராயல் அறங்கூற்றுமன்றத்தில் விஜய் மல்லையா மனு பதிகை செய்தார். மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து, கடந்த 2 அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து உயர்அறங்கூற்றுமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் ஆளும் தரப்பினரால் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை இங்கிலாந்து உயர்நீதிநீதி மன்றம் நேற்று அறிவித்தது. அதன்படி, 29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: (11.02.2020) இங்கிலாந்து உயர்அறங்கூற்று மன்றத்தில் மனு விசாரணைக்கு வருகிறது. 3 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று உயர்அறங்கூற்று மன்ற அதிகாரி ஒருவர் கூறினார். இன்னும் முழுமையாக 206 நாட்கள் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து பாதுகாப்பு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,218.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.