Show all

பாஜக நடுவண் அரசு தொடங்கியுள்ள அடுத்த அடாவடி! தொடங்கினர் தமிழக பா.உக்கள் போராட்டம்; டெல்லியில் நெக்ஸ்ட்டுக்கு எதிராக

பாஜக நடுவண் அரசு தொடங்கியுள்ள அடுத்த அடாவடி: மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஏற்கனவே பாஜக நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எழுதி மருத்துவ படிப்பு படித்து முடிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் மருத்துவராக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் அகில இந்திய அளவில் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுத வேண்டும் என்று பாஜக நடுவண் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நடுவண் அரசு அறிவித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேர்வை கண்டித்தும், நீட் நுழைவு தேர்வை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள், நீட் தேர்வை நிறுத்துங்கள், மாநில சுயாட்சிக்கு மதிப்பு கொடுங்கள், நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யுங்கள் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன்பு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே கர்நாடக பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரிய அளவில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக மருத்துவப் படிப்பு மாணவர்களை நெக்ஸ்ட் தேர்வை எழுத வலியுறுத்தும் நடுவண் அரசின் புதிய மருத்துவ மசோதாவுக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மசோதா நாடாமன்றத்தின் நிலைகுழுவில் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,218.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.