'அன்று மோடியின் கூட்டத்துக்கு மக்கள் வந்தார்கள், இன்று மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவேண்டியிருக்கிறது' என்ற வாசகத்துடனான காணொளி இணையத்தில் தீயாகி வருகிறது. 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிப்பூரின் இம்பால் நகரில் மோடியின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. காணொளியில் கூட்டத்தில் இருந்து எழுந்து போகும் மக்களை, காவல்துறையினர் கதவுக்கு வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்துவதை பார்க்க முடிகிறது. இந்தக் காணொளியுடன், 'அன்று மோடியின் கூட்டத்துக்கு மக்கள் வந்தார்கள், இன்று மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவேண்டியிருக்கிறது' என்ற வாசகமும் அதில் காணப்படுகிறது. மணிப்பூர் டாக்ஸ் என்ற உள்ளூர் வலைதளமும் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளது. 'மோடியின் நிகழ்ச்சியில் மக்களை தடுத்து நிறுத்தி வைக்க காவல்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காவல்துறையினர் தடுப்புகளைப் போட்டு அவர்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இது வெட்கக்கேடு' என்றும் இந்த வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. கீச்;சுவில் வெளியான இந்த பதிவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது. மோடியின் உரையில் அதிருப்தியடைந்தவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற விரும்பியதாக இந்தக் காணொளியை முகநூலில் பகிர்ந்தவர்கள் தெரிவித்துள்ளவர்கள். காவல்துறையினர் கூட்ட மைதானத்தில் இருந்து வெளியேறும் வாயில்களை மூடிவிட்டதாகவும் ஓரிரண்டு காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், இரும்பு கதவுகளின் மேல் ஏறி திடலில் இருந்து வெளியே செல்வதற்கு பெண்களும் முயற்சிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



