சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், வேளாண்மைக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் வகைக்காக: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், வேளாண்மைக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்பதுதான் அந்த அறிக்கையின் செய்தி. அப்போது தமிழக முதல்வர் எம்ஜியார் அவர்கள் மரணமடைந்த நிலையில், இரண்டு கிழமைகள் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வர், அப்புறம் மூன்று கிழமைகள் ஜானகி முதல்வர், தொடர்ந்து ஓராண்டு இராஜிவ்காந்தி நடுவண் அரசின் ஆளுநர் ஆட்சி. அந்த நேரத்தில்தான் இராஜிவ் இலங்கைக்கு 'இந்திய அமைதிப் படை' என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் ஒரு படைப் பிரிவை அனுப்பி- விடுதலைபுலிகள் மீட்டு ஆட்சி அதிகாரம் நடத்தி வந்த தமிழீழத் தாய்மண்னை சிங்களவர் ஆக்கிரமிக்கும் வகைக்காக, நான்காம் தமிழீழப் போருக்கு வித்திட்ட முயற்சிகளில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். வெற்றிகரமாக ஐநாவின் அந்த அறிக்கை கிடப்பில் போடப் பட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் இயல்பை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன. சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக ஊடகங்கள் அந்த ஐநாவின் பழைய ஆய்வை அரசின் கவனத்திற்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளன. தற்போதும் தமிழகத்தில் பரபரப்பான சூழல். இந்தக் கிழமையிலேயே தமிழக இடைத் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டு, தமிழகத்தில் பாஜக நடுவண் அரசின் புண்ணியத்தில், எடப்பாடி-பன்னீர், ஆட்சியை தொடர்ந்து நீட்டித்து வந்தது முடிவக்கு வர வாய்ப்பு உள்ள நிலையில், மீண்டும் அதே ஐநாவின் ஆய்வறிக்கை ஊடகங்களால் நினைவு படுத்தப் படுகிறது. ஆனால் அடுத்த கிழமையிலிருந்து யார் ஆட்சி அமையப் போகிறது இந்தியாவில்? தமிழகத்தில் நடக்கப் போவது என்ன? ஆளுநர் ஆட்சி முன்னெடுக்கப் படுமா? உடனடியாக பொதுத் தேர்தல் வருமா என்ற பரபரப்புகளில் ஊடகங்களும் முழுகப் போகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
இந்த முறையும் ஐநாவின் அறிக்கை கிடப்பிற்குதான் போகப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.