ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கெத்து காட்டி தலைமைஅமைச்சராக பதவியேற்ற மோடி, மக்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்கவில்லை! அமெரிக்க டைம் இதழ் வரை முரசறைந்து தெரிவித்து விட்டது. நடப்பு பாராளுமன்றத் தேர்தல் முடிவில், பாஜக பெரும்பான்மை பெறாவிட்டால் மோடிக்கு தலைமைஅமைச்சர் பதவி கிடையாது! கட்சி அறிவித்து விட்டது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தல் முடிவு தொங்கு பாராளுமன்றமே என்று அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதையொட்டியே ஒவ்வொரு கட்சியினரும் சிந்தித்து வருகின்றனர். இதில் மிகப்பெரிய அவலம் எதுவென்றால், சிலகட்சிகள் தங்களுக்கு யார் பெரிய பெட்டியாக தருவார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டிருப்பதுதான். மற்றபடி இராகுல் காந்திக்கு ஒரே இலக்குதான்! பாஜக நடுவண் ஆட்சியில் அகற்றப் படவேண்டும். மற்ற மற்ற கட்சிகள் என்ன நினைத்து கொண்டிருக்கின்றன என்பதைப்பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் தீர்மானிக்கப் படும். இமயமலையில் சுமார் 11,755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள கோயிலுக்கு 60 அகவைக்கு மேல் உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் மலை உச்சியில் உயிர்வளிப் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் 60 அகவைக்கு மேற்பட்ட முதியவர்கள். இந்நிலையில், 68 அகவை மோடி கையில் கம்பு ஏந்திக் கொண்டு மலை ஏறிச் செல்கிறார். இந்தக் குகை 10 அடி உயரம் கொண்டது, கழிவறை, சாளர வசதிகள் கொண்டது. குகையின் சாளரத்தில் இருந்து பார்த்தால் கேதார்நாத் கோயிலை பார்க்க முடியும். இந்தக் குகையை ஒழுங்கு படுத்திய நேரு இன்ஸ்டிடியூஸ்ட் ஆப் மவுன்டெய்னரிங்கை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதமே படுக்கை வசதி, மின்சாரம், குடிநீர் வசதிகளுடன் இந்தக் குகையை ஒழுங்கு படுத்தி விட்டோம். ஆனால், பூட்டிக் கிடந்தது. மோடி தியானத்தை முன்னிட்டு கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டன எனத் தெரிவித்துள்ளனர். மோடி இன்று உத்ரகாண்டின் மற்றொரு இமயமலை கோயிலான பத்ரிநாத் செல்கிறார். மீண்டும் தலைமைஅமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதற்கான கொத்து காட்டுகிறார் மோடி என்று சமூக வலைதளங்கள் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
சகல வசதியுடன் .சுமார், 15 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்ட மோடி, இன்று காலை குகையில் இருந்து வெளியே வந்தார். முன்னால் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து 'ஹர ஹர மகாதேவ்' என்று முழக்கமிடுமாறு கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.