Show all

உலகினர் தேடிய இந்தியா ஒன்றல்ல இரு வேறு!

உலகினர் தேடிய இந்தியா இருவேறாக இருந்தன. ஒன்று நாவலந்தேய ந்தேயா. மற்றது காந்தார இந்தியா. கடலை எல்லையாகக் கொண்டவர்கள் தேடியது நாவந்தேய ந்தேயா. இந்தியாவோடு தரைப்பகுதியால் இணைந்தவர்கள் தேடியது காந்தார இந்தியா. அதனால் இந்தியா என்ற பெயர் நாவலந்தேயத்தில் இருந்து முகிழ்த்ததாக ஒரு சாரராலும், சிந்து- காந்தாரம் என்பதிலிருந்து முகிழ்த்ததாக ஒரு சாரராலும், சொல்லப்பட்டாலும் இரண்டும் இரு வேறு என்பதே உண்மை. 

21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகினரின் இந்தியா குறித்த தேடல் இரண்டு வகையானது. இதை உலகம் மற்றும் வடஇந்தியர் புரிந்து கொள்வதற்கு அடிப்டையாக- தமிழர் புரிந்து கொள்வது கட்டாயத் தேவையாகும். 

ஒரு தேடல்: நாவலந்தேயம் எங்கே இருக்கிறது? வானியல் குறித்து தௌளத் தெளிவான அறிவைப் பெற்றிருக்கிற, கடலோடுந்திறத்தில் வல்லவர்களாயிருக்கிற,  மெல்லிய துiணிவகை, முத்து, மயில்தோகை, ஏலம் இவற்றைக் கொடுத்துவிட்டு தங்கத்தையும், குதிரைகளையும் அள்ளிச் செல்லுகிற தமிழர்கள் எங்கே வசிக்கின்றார்கள் என்பதாகும். அவர்கள் நாவலந்தேயத்தை ந்தேயா என்றும் தமிழர்களை தமிரிசி, தமிலுக், தமிரிக்கே என்றும் பல பெயர்களில் புரிந்து கொண்டு தமிழர்களையும், நாவந்தேயத்தையும் தேடினார்கள்.

ஏனென்றால்:- ஐயாயிரத்து நூற்று இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னமே- கலிஆண்டு கணக்கைத் தொடங்கி- ஆண்டுக்கு 365 நாட்கள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பறை என்று கண்டறிந்தவர்களாய் தமிழர்கள் இருந்தனர். தமிழர்கள் கப்பல் கட்டி- காற்றின் திறத்தால், ஆமைகளின் வழிகாட்டுதலால், எப்போது மழை எவ்வெவ்வகைக் காற்று என்பன அறிந்து கடற்தொடர்பு உடைய நாடுகளில் இவர்கள் மட்டும் ஒருவழித் தொடர்பாக சென்று வணிகம் புரிந்து வந்தார்கள். 

உலகின் முதல் வணிகனாக தமிழன் மட்டுமே உலகஞ் சுற்றி வந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்தது கடல். எந்த நாட்டுக்கெல்லாம் கடல் எல்லையாக இருந்ததோ அந்த நாட்டுக்குத் தமிழன் வணிகத்திற்குச் சென்றிருப்பான். விதவிதமாக கப்பல் கட்டி. 
(!)நியூசிலாந்தின் கடற்கரையில் கிடைத்த ஒரு மணியை எடுத்து பொருட்காட்சியில் வைத்திருக்கிறார்கள். அந்த மணியில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறது.
(!)தங்கள் நாட்டு செல்வத்தை, தமிழக வணிகர்கள்- முத்தையும், நறுமணப்பொருட்களையும், மெல்லிய துணிவகைகளையும் கொடுத்துவிட்டு, எல்லையில்லாமல் அள்ளிச் செல்வதாக எகிப்து நாட்டு அறிஞன் தாலமி புலம்பியது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 
எகிப்து இளவரசி உலக அழகி கிளியோபட்ரா தமிழக முத்தை பாலில் ஊறவைத்து அந்தப் பாலில் குளித்து வருவார்களாம். இப்படி தமிழனின் உலகளாவிய வணிகத்தால்- தமிழனும் நாவலந்தேயமும் உலகினரில் கடற் தொடர்பு உடைய நாடுகளால் தேடப்பட்டனர்.

அப்படியான ந்தேயா தேடலில் இந்தியாவை முதன் முதலாக வந்தடைந்தவர் போர்த்துக்கீசிய கடலோடி வாஸ்கோடகாமா. வாஸ்கோடகாமா நாளது 06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-4600 அன்று (20.05.1498) இந்தியாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கோடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். 

ந்தேயா தேடலில் இந்தியாவை முதன் முதலாக வந்தடைந்துவிட்டார் போர்த்துக்கீசிய கடலோடி வாஸ்கோடகாமா என்று அறிந்த மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியா வர விரும்பினர். அதன் பிறகு பிரித்தானிய ஆட்சி இந்தியாவில் அமைந்தது வரைக்குமான நிகழ்வுகளுக்கு இந்தத் தேடல்- ந்தேயத் தேடல் காரணமாக அமைந்தது.

இரண்டாவதான தேடல் தரை சார்ந்தது. தேடல் ஆரியர் நோக்கியது. தம் முன்னோரில் சிலர் நெடுந்தொலைவு பயணித்து ஒரு பேராற்றங்கரையில் நாகரிகம் படைத்து, வேதம் போர்ப்புதினங்களில் எல்லாம் சிறந்து விளங்குவது குறித்தான தேடலாக இருந்தது. ஆம் அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியா வந்தடைந்த தம் முன்னோரில் சிலரான ஆரியரைத் தேடினார்கள். 

தற்போது ஐரோப்பியர்கள் ஆளுமையாக முன்னெடுக்கும் வரலாற்றில் இந்தோ ஆரிய மக்கள் என்று அவர்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் வடஇந்தியர்கள் யாரும் தங்களை இந்தியர் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களை பாரத்யாங் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 

இந்தோ ஆரியர்கள் என்பவர்கள், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியத் துணை கண்டத்து நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் ஆவர். இந்தோ ஆரிய மக்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்தோ ஆரிய மக்கள் வேதகாலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தோ ஆரிய மக்களின் மொழி, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான இந்தோ ஈரானிய மொழியின் ஒரு கிளை மொழியாகும். இந்தோ ஆரியர்கள் பேசிய மொழிகள் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகும்.

தற்போது தெற்காசியாவில் 121கோடி இந்தோ ஆரிய மக்கள், இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவில் தென்னிந்தியாவைத் தவிர மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதிகளில், இந்தோ ஆரிய மொழிகள் ஏறத்தாழ 85கோடியே அறுபது இலட்சம் மக்களால் பேசப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பியவின், இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களின் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் உஸ்பெக்கிஸ்தாண், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் பகுதிகளிலும்; தெற்காசியாவில் குறிப்பாக ஈரான், ஈராக் நாடுகளில் குடியேறினர். பின்னர் இவர்களில் ஒரு பிரிவினரான இந்தோ ஈரானிய குடும்பத்தின் ஒரு ஒரு கூட்டம் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு இந்தியாவில் தமிழ்த்தொடராண்டு-1300 களில் (கிமு1800) குடியேறியேறினார்கள்.

இந்த ஆரியர்கள் மீதான தேடல் போராகவே தொடங்குகிறது: இரண்டாயிரத்து ஐநூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் படையோடு பெர்சியாவின் அரசர் வட மேற்கு இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. 

நூறாண்டு காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. 

காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றுகின்றன. 

ஆரியர் அல்லாத ஒரு இனக்குழுவைச் சேர்ந்த சந்திர குப்த மௌரியன்- மௌரியப் பேரரசினை நிறுவுகின்றார். இவர் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவரது பேரரசில் இணைகின்றன. அவற்றுடனே அந்த இந்திய ஈரானிய இனக்குழுவினரும் இணைகின்றனர். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவர் மகன் பிந்துசாரன் வருகின்றார். அவருக்குப் பின்னர் அசோகன் வருகின்றார். 

அசோகன் புத்தத்தை தழுவுகின்றார். அவரால் புத்த மதம் வளர்கின்றது. ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

மௌரியப் பேரரசு இறுதியில் பிரகத்திர மௌரியனை வந்து அடைகின்றது. தன்னுடைய படை அணிவகுப்பை பிரகத்திரன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன்  ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. இவரது அரசே இந்திய மண்ணில் 2200 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த முதல் ஆரிய அரசு என்று பேசப்படுகின்றது.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலேயே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன் பகுதியை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு வடமேற்கு இந்தியா கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. 

கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை சாகர்கள் என்ற இனக்குழுவினர் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களைக் குஷானர்கள் என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சாகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். மேற்குப் பகுதியில் நுழைந்த இவர்கள் இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. பார்தியர்கள் என்கிற இன்னொரு இரானிய நாடோடி இனத்தவர்கள் சகர்களைத் தோற்கடிக்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. இவர்கள் 2100 ஆண்டுகளுக்கு முன்பான கால எலலையில் ஒரு நூறு ஆண்டுகள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். 

வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். 

சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து துரத்தி அடித்த சீன நாடோடி இனத்தினரான குசானர்கள் பார்தியர்களின் அரசை வீழ்த்த மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் பல்வேறு புதிய புதிய மொழிகள் தோன்றிய வண்ணமே உள்ளன. 

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. 

மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. குப்தர்கள் ஆட்சி 1600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. குப்தர்களின் காலம் இந்தியாவின் ஒரு பொற்காலம் என்றெல்லாம் பேசப்படுகிறது. 

குப்தர் ஆட்சிகாலத்தைத் தொடர்ந்து இரஜபுத்திரர்கள் என்ற ஒர் ஆரிய இனக்குழுவின் ஆட்சி தொடர்கின்றது. வட இந்தியாவில் இவர்களுடைய ஆட்சி 1300 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது.
இவர்கள் காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.
என்பதே அந்தப் பிரிவுகளின் பொருள் என்றும் அவர்கள் கருதுகின்றனர். 

இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு ஆண்டு காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் பொருள்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் காலத்தில்தான் இந்தியா பாரதம் என்று வலுவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே வட இந்தியர்கள் ஒட்;டு மொத்த இந்தியாவை பாரதம் என்று வழங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

இந்தக் காலக்கட்டத்தில்; தான் பல பார்ப்பனிய இனக்குழுக்கள் தென்னகத்தில் ஊடுருவி மன்னரின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் இராமயணம் மகாபாரதக் கருத்துப் பரப்புதல்களையெல்லாம் செய்கின்றன. கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளுக்கெல்லாம் பயணித்த தமிழ்வணிககர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு மன்னர்களின் ஆதரவு குறைந்து முற்றாகவே அவர்கள் வணிகம் உள்நாட்டில் முடங்குகிறது. ஏறத்தாழ இந்தக் காலக் கட்டத்தில்தாம் உலகினரில் கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளிடம் நாவலந்தே ந்தேயா தேடல் தொடங்குகிறது.

இராஜபுத்திரர்களுக்குப் பின்பு வட இந்தியா டில்லி சூல்தான்கள் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்களுக்குப் பின்பு அடுத்து வடஇந்தியாவை ஆக்கிரமிப்பது மொகலாயர்கள் ஆவர்.

இப்படி நாவலந்தேயத்து தேடலில் இந்தியா வந்த பிரித்தானியர் ஆட்சி காலம் தொடங்குவதற்கு முன்பு வரை ஆரிய இனம் பல்வேறு நாடோடி இனக்கலப்பிற்கும், ஏராளமான இனக்குழுவினரின் மொழிக்கலப்பிற்கும் ஆளாகி இன்றைக்கு கடைசியாக தேவநாகரி எழுத்துக்களையும் மிகப்பெரும்பான்மை உருது மற்றும் பாலி, பெர்சியன், அரபு பலமொழிகளின் கலவை மொழியான ஹிந்தியை பெரும்பான்மையான மக்கள் தங்கள் மொழியாக ஏற்றிருக்கும்; நிலைக்கு வந்துள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.