வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், சீனாவை வம்பிழுக்கவும், இந்தியாவை ஒப்பிடவும் தவறவில்லை 07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், நாம் ஒரே குடும்பமாக நின்று கொரோனாவால் இறந்த விலைமதிப்பில்லாத உயிர்களுக்காக வருந்துகிறோம். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்குவோம் என்றும் கொரோனா நுண்நச்சுப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம் என்றும் உறுதியேற்போம் என்று தெரிவித்தார். சீனா நுண்நச்சான கொரோனா நுண்நச்சு மிகவும் மோசமான நுண்நச்சாக உள்ளது. இந்தக் கொடூரமான நுண்நச்சு எந்த சூழலிலும் சீனாவை விட்டுவெளியேற அனுமதித்திருந்திருக்கக் கூடாது. ஆனால் சீனா அதை செய்துவிட்டது. இதன் மூலம் உலகையே பாதிப்புக்குள்ளாகிவிட்டது. என்று வழக்கம் போல சீனாவை வம்புக்கு இழுக்கத் தவறவில்லை டிரம்ப் தனது பேச்சில். கொரோனா சோதனையில் உலகிலேயே அமெரிக்காதான் முன்னணியில் இருக்கிறது என்றும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை தனது பேச்சில் தவறாமல் ஒப்பிட்டுப் பேசினார். உலகில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான். இறப்பிலும் சரி, அன்றாடம் உயரும் பாதிப்புகளிலும் சரி, இந்த வல்லரசு நாடு முன்னணியில் உள்ளது. அதாவது 39,70,671 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 11,63,861 பேர்கள் குணமடைந்துள்ளார்கள். 1,44,173 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பொருளாதாரத்தை அமெரிக்கா மெதுவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை ஐந்து கோடி பேர்களுக்கு கொரோனா சோதனை எடுத்துள்ளோம். அதிகம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒரு கோடியே இருபது இலட்சம் பேர்களுக்கு கொரோனா சோதனைகளைச் செய்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்றவர்கள் எல்லாம் எழுபது இலட்;சம், அறுபது இலட்சம், நாற்பது இலட்சம் என கொரோனா சோதனை செய்துள்ளனர். பரிசோதனை எண்ணிக்கையில் நாம் சரியான முறையில் செய்துள்ளோம் என்றே கருதுகிறேன். இளைஞர்களுக்கு மெல்லிய அறிகுறியோ அல்லது அறிகுறி இல்லாமலோதான் உள்ளது. அவர்கள் கொரோனா பாதிப்பிலிருப்பதே அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இளைஞர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். என்று இளைஞர்களுக்கு கொரோனா எச்சரிகை குறித்து வேண்டுகோள் விடுத்தார் டிரம்ப். அமெரிக்க அதிபர் ஒப்பிட்டு தங்கள் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் தேடிக் கொள்ளப் பயன் பட்ட இந்தியாவில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 12,27,148 குணமானவர்கள் 7,53,000 உயிரிழப்புச் சோகம் 29,319 ஆகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



