நமது சென்னை போல, இல்லையில்லை கொஞ்சம் கூடுதலாகவே குஜராத் நகரத் தெருக்களில் மாடுகள் திரியுமாம். டிரம்பின் வருகையை ஒட்டி கால்நடை துறையும் காவல்உலா (ரோந்து) பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக தெருக்களில் மாடுகள் அலைவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க தயாராகி வருகிறது ஆமதாபாத் நகரம். இன்று டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி மொடேரா அரங்கம் எனப்படும் சர்தார் பட்டேல் அரங்கத்தில் பெரும் கூட்டத்தின் முன் உரையாற்றவுள்ளனர். ஆமதாபாத் நகரம் விளக்குகள் மட்டும் புதிய சுவர் பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் மொடேரா அரங்கம் வரையிலான பாதை தூய்மைப்படுத்தப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ‘வணக்கம் டிரம்ப்’ என்னும் நிகழ்ச்சியை அமெரிக்க இந்தியாவுக்கான உறவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று கூறும் வகையில் டிரம்ப், மோடி மற்றும் மெலானியா டிரம்ப் அடங்கிய பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மோடி டிரம்ப் செல்லும் பாதையில் காவல் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் எச்சரிக்கை ஒலி அவ்வப்போது காதை ரீங்காரமிட ஆமதாபாத் நகரம் முழுவதும் ஒரு காவல்துறை முகாம் போல மாறியுள்ளது. யாரேனும் கருப்பு ஆடை அணிந்துள்ளனரா அல்லது பார்வையாளர்களுக்கென இருக்கும் பகுதியிலிருந்து ஏதேனும் பொருட்கள் வீசப்படுகிறதா போன்ற சின்ன சின்ன கருத்துருக்களும் கவனமாகப் பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரையான் 22 கிமீ தூர பாதையில் இரு பக்கமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் போக அமெரிக்காவின் ரகசிய சேவை, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பாதையில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான ஆளில்லா விமானங்கள் குறித்து சோதிப்பதற்கான தொழில்நுட்பமும், தேசியப் பாதுகாப்புப் படையின் ஆண்டி ஸ்னைப்பர் குழு ஆகியவையும் அந்த 22 கிமீட்டர் தூர பாதியில் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெர்ரா, இந்திய கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை பறைசாற்ற டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் திரள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்தியா சாலைக் கண்காட்சி என ஆமதாபாத் மாநகராட்சி பெயரிட்டுள்ளது. இதன் பொருட்டு பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களைப் பறைசாற்றும் வகையிலான மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரில் 16 தொகுதிகள் உள்ளன. டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தொகுதி மக்களுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் மக்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை டிரம்பின் வண்டித்தொகுப்பு தாண்டும் வரை அந்த இடத்தைவிட்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



