மைக்கேல் ஹியூஸ்- புவி தட்டையானது என நிரூபிக்க தானே ஒரு விண்வெளிக் கலனைத் தயாரித்து விண்ணில் பறக்க முயன்று விண்வெளிக்கலன் வெடித்ததில் பலியானார். 12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புவி கோளவடிமானது அன்று. தட்டையானது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹியூஸ். இவர் விண்வெளி வீரரும் கூட. புவி கோளமானது என நிரூபிக்க தானே ஒரு விண்வெளிக் கலனைத் தயாரித்திருந்தார். மேட் மைக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ், ஒரு கண்டுபிடிப்பு தொலைக்காட்சி சேனல் குழுமத்தின் இயல்அறிவு (சயின்ஸ்) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவர், பூமி கோளவடிவமானது அல்ல, வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என கூறினார். இதற்காக தானே ஒரு விண்வெளிக் கலனைத் தயாரித்த மைக்கேல், அவற்றை கொண்டு தன்னுடைய கூற்றை நிரூபிக்க ஆயத்தமானார். நீராவியால் இயங்கக்கூடிய இந்த விண்வெளிக் கலன் தயாரிப்புக்குச் சில நிறுவனங்களும் நிதியதவி அளித்துள்ளன. திட்டமிட்டபடி லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் விண்வெளிக் கலனில் பறக்க மைக்கேல் தயாரானார். சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயற்சித்து விண்வெளிக் கலனைச் செலுத்தினர். ஆனால், விண்வெளிக் கலன் கிளம்பிய சில மீட்டர் தொலைவிலேயே உயரே பறந்த விண்வெளிக் கலன் வெடித்ததில் கீழே விழுந்த மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்த சேனல் தரப்பில், இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



