Show all

எப்படியெல்லாம் வருமானம்- சுங்கச்சாவடி அபராத வசூல் 20கோடி! உருப்படியாய் மக்களுக்கு ஒன்றும் செய்ய மறுக்கிறதே நடுவண் பாஜக அரசு: மக்கள்

இதுவரை சுங்கச் சாவடிகளில், விரைவுக்கட்டு அட்டை வழிக்குள், விரைவுக்கட்டு அட்டை இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வருமானம் என்று மக்கள் மலைக்கிறார்கள். 

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுங்கச்சாவடியைக் கடக்க விரைவுக்கட்டு அட்டை வண்டியில் ஒட்டியிருப்பது கட்டாயம் என்று இந்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதுவரை, 1.55 கோடி எண்ணிக்கையிலான விரைவுக்கட்டு அட்டைகள் வணிகம் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விரைவுக்கட்டு அட்டை பயனாளிகள் மட்டுமே, சுங்கச் சாவடிகளில், அதற்காக உள்ள வழியில் நுழையலாம். விரைவுக்கட்டு அட்டை இல்லாத வாகன ஓட்டிகள், அவ்வழியில் நுழையக் கூடாது. அப்படி, அதில் நுழைந்தால், அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை அமலில் உள்ளது. அவர்களிடம் இருந்து, இரண்டு மடங்கு அதிக சுங்க கட்டணம், அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

இதுவரை சுங்கச் சாவடிகளில், விரைவுக்கட்டு அட்டை வழிக்குள், விரைவுக்கட்டு அட்டை இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வருமானம் என்று மக்கள் மலைக்கிறார்கள். உருப்படியாய் மக்களுக்கு ஒன்றும் செய்ய மறுக்கிறதே இந்த நடுவண் பாஜக அரசு என்று புலம்புகிறார்கள். டிரம்ப்-அவமானச்சுவர் எழுப்புகிற காசிலும் இந்த வசூல் வருமானத்திலும் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தால் என்ன என்று அங்கலாய்க்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.