Show all

இணையத்தைச் சூடாக்கி வருகிறது! துரோகத்தனத்திற்கு பெயர்போன முத்தையா முரளிதரனுக்கு எதிரான கருத்துக்கள்!

பொதுஜன பெரமுனவின் குடிஅரசுத் தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில், முத்தையா முரளிதரன் இன்று தெரிவித்த தமிழர் விரோதக் கருத்தின் மீதான எதிர்க்கருத்துக்களால் இணையம் சூடாகி வருகிறது.

23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், பொதுஜன பெரமுனவின் குடிஅரசுத் தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில், முத்தையா முரளிதரன் கலந்து கொண்டு தெரிவித்த தமிழர் விரோதக் கருத்தினால், உலகத் தமிழர்களின் கோபப்பதிவுகள் இணையத்தில் தீயாகி வருகின்றது.

பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்த பின் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முதன்மையான நாள் என முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்தே உலகத் தமிழர்களின் கோபப் பதிவுகளுக்கு காரணமான கருத்தாகும்.

முத்தையா முரளிதரன் தமிழர் விரோதக் கருத்துக்கள் தெரிவிப்பது இது முதன் முறையன்று. உலகத் தமிழர்களால் துரோகத் தமிழன் என்று அறியப் படுபவர்தான் இந்த முத்தையா முரளிதரன் என்பது குறிப்பிடத் தக்கது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,270.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.