Show all

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 251பேர் மீது வழக்குப்பதிவு 25,10,000 வசூல்!

இந்த கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தக் கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஒட்டியதற்கு 251 பேரிடம் இருந்து ரூபாய் இருபத்தைந்து இலட்சத்து பத்தாயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

மது விலக்கை அமல்படுத்தினாலே, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிற குற்றம் நூறு விழுக்காடும் குறைந்து விடும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்கிற நம் பழந்தமிழர் சொலவடையைப் புரிந்து கொள்ளாத அரசாக, மதுவை விற்பனை செய்து கொண்டே, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிற வகைக்கு அபராதம் விதிப்பது என்கிற இரட்டை வருமானம் ஈட்டுகிற வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, சமூகப் பாதுகாப்புக்கானதாக அமைந்த அரசு என்று குற்றஞ் சாட்டுகின்றனர் குடிமகன்களின் குடும்பத்தார். 

தவறு செய்வதில்: மதுவை விற்பனை செய்கிற அரசும், பொறுப்பில்லாமல் அரசின் வலையில் சிக்கி வீழ்கிற குடிமகன்களும் பங்குபெறுகின்றனர் என்கிற போது, தண்டனை மட்டும் குடிமகன்களின் குடும்பத்தினருக்கா? என்று சமூக வலைதளங்களில் இடுகைகளாகவும், கருத்துப் படங்களாகவும் பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் குடிமகன்களின் குடும்பத்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,270.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.