Show all

நடிகர் இராஜசேகர் காலமானார்!

இராஜசேகர் இறப்பு குறித்து: சாகறதுக்குள் சொந்த வீட்டுல ஒரு நாள் வசிச்சிட்டுப் போயிடணும்கிறது தான் அவரோட ஒரே ஆசையா இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை என்று வருந்துகிறார் அவருடைய மனைவி தாரா.

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, உள்ளிட்ட படங்களை இயக்குநர்  ராபர்ட்டுடன் இணைந்து இயக்கியவர் ராஜசேகர். இரட்டை இயக்குநர்களான இவர்களில், ராபர்ட் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ராஜசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஏழு படங்கள் வரை இயக்கியிருக்கும் ராஜசேகர், ராபர்ட்டுடன் இணைந்தே ஒளிப்பதிவாளராக திரைப் பயணத்தைத் தொடங்கியவர். நிழல்கள் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின், சில சின்னத்திரை தொடர்களை இயக்கினார். சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை தொடர்களில் நடித்தார். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சத்யா தொடரிலும் நடித்துக்கொண்டிருந்தார்.

மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கியபோது நடிகை சரண்யாவைத் திருமணம் செய்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக சரண்யாவுடனான திருமணம் விவாகரத்தில் முடிய, இரண்டாவதாக தாரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் சிறியதாக ஒரு வீடு வாங்கினார். அதுல இன்னும் குடியேறக்கூட இல்லை. சாகறதுக்குள் சொந்த வீட்டுல ஒரு நாள் வசிச்சிட்டுப் போயிடணும்கிறது தான் அவரோட ஒரே ஆசையா இருந்தது. அது நிறைவேறவில்லை என்று வருந்துகிறார் அவருடைய மனைவி தாரா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,269.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.