உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா நுண்ணுயிரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்கிறார் பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர். 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நுண்ணுயிரி உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா நுண்ணுயிரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவின் மைய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது. இந்த நிலையில், “கொரோனா நுண்ணுயிரி இயற்கையானது அல்ல் சீனாவில் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சி சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது. இந்தநிலையில், எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் என்ற நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உகான் தேசிய உயிரி பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா தொடர்பான நுண்ணுயிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நுண்ணுயிரி காட்டு விலங்குகளிடமிருந்து உகான் சந்தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். இது நவீன காலத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு தொல்கதை. அது சாத்தியமற்றது என்று கூறினார். இந்த வழக்கு உலகின் சட்டாம்பிள்ளைகள் இருவருக்கிடையே தொடுத்துக் கொள்கிற விளையாட்டு என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உலகினருக்கு கிடைக்கவிருக்கின்ற பயன் ஏதும் இல்லை. இந்தக் கொரோனாவில் நாம் பாதிக்கப்பட்டதும் கூட உலக நாடுகளோடு நாமும் தற்சார்புகளைத் தொலைத்தமைதாம். இனிமேலாவது இந்தியா போன்ற நாடுகள் தற்சார்புக்கு முதன்மைத்துவம் தருவது பாதுகாப்பானது. ஆனால் தற்சார்பு என்பது ஒரேமொழி, ஒரேமதம், ஒரேகட்சி என்கிற பாஜக ஆதிக்கவாதம் அல்ல. உண்மையில் இந்தக் கொரோனாவிலும் நம்மை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிற மாநிலங்களின் அனைத்து அடையாளங்களே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



