Show all

நெஞ்சு பொறுக்குதில்லையே! 3மருத்துவர்கள், 2காவல்துறையினர், 2இதழியலாளர்கள் என- பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பில் ஏழு பேர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 3 மருத்துவர்கள், 2 காவல்துறையினர், 2 இதழியலாளர்கள், என ஏழு பேர்களுக்கு- மக்களுக்கு பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பு என்கிற முதன்மைத் துறைகளை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொண்டுவரும் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லையா, உரிய கருவிகளே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான நிகழ்வு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன் கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இவரின் மரணம் தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் இன்று மட்டும் 3மருத்துவர்கள், 2காவல்துறையினர,  2இதழியலாளர்கள், என மக்களுக்கு பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பு என்கிற முதன்மைத் துறைகளை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 

இதுவரை தமிழகத்தில் மட்டும் 16 மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் தமிழக அரசு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவை எதிர்கொண்டுவரும் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லையா, உரிய கருவிகளே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.