ஒற்றைக் கொரோனாவால் உலகின் மற்ற மற்ற துறை வருமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுற்றுலாத்துறை வருமானம், மனிதவளவருமானத்தின் மீது தொடுக்கப்பட்ட உயிரிப்போராக அமைந்து விட்டது கொரோனா 08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் வருமான வரியே வாங்காமல் தங்கள் மக்களுக்கு பொன்னான வாழ்க்கையை வழங்கி வரும் நாடுகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். பகாமஸ், கெய்மன் தீவுகள், மாலைத் தீவுகள், மொனாக்கோ, நவ்ரூ, இந்த நாடுகள் வருமான வரியே வாங்காமல் தங்கள் மக்களுக்கு பொன்னான வாழ்க்கை தரும் நாடுகள். இந்தியாவில் தமிழகமே சுற்றுலாத் துறையால் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாகும். கேரளம்- மனிதவள வருமானம் ஈட்டுவதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகும். மனிதவள வருமானம் ஈட்டுவதிலும் தமிழகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கெரோனாவில் இருந்து முழுமையாக நாம் எழும்போது தமிழகமும் கேரளாமும் இந்தத் துறை வருமானத்தில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கும். நடுவண் அரசு உரிய இழப்பீடுகளை வழங்கி இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒத்துழைக்க வேண்டியது நடுவண் அரசின் கடமையாகும். இதில் உலகத்திற்கே மனிதவள வருமானத்தைத் தரும் நாடுகளான அரபுநாடுகளும் இந்த பாதிப்புகளை சுமக்கும். சுற்றுலா செல்லுவதில் முதன்மை வகிக்கிற மேற்கத்திய நாடுகளுக்கு கொஞ்ச காலத்திற்கு சுற்றுலா மகிழ்ச்சி இல்லை அவ்வளவுதாம். மனிதவள வருமானத்திற்காக பல உலக நாடுகளோடு தொழிற் தொடர்பில் இருக்கிற தமிழகம், மிகக் குறிப்பாக- ஒரு மாபெரும் வெள்ளம், ஒரு மாபெரும் புயலில் இருந்து மீண்டெழுந்த சென்னை- தற்போது இந்தக் உயிரிப்போராக அமைந்துவிட்ட கொரோனாவிலிருந்தும் மீண்டெழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். மேலும் கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சீனாவின் மீதான குற்றச்சாட்டு சரிதான். எதிர்காலத்தில் சீனா உலக நாடுகளுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறதோ தெரியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



