Show all

பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில் செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து.

 

கலைத்துறை செய்திகள் என்றாலே தனி மகிழ்ச்சிதானே. நமது மகிழ்ச்சிகான ஓர் இனிய செய்தி: பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில்; செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து தெரிவித்து மகிழ்கின்றனர்.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சின்னத்திரையில் செம்பருத்தியாகவும், சின்னய்யாவாகவும் விஜய் தொலைக்காட்சி கொண்டாடிகளை மகிழ்வித்து வந்த  நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளாள். கொண்டாடிகள் வாழ்த்தி வருகின்றனர்.
 
இராஜா ராணி தொடரில் கதைத்தலைவி, கதைத்தலைவனாக நடித்துவந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

தாய்மையுற்றிருந்தார் ஆல்யா மானசா. அவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியும் கொண்டாடிகளுக்கு பகிர்ந்து வாழ்த்து பெற்றனர் செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். 

நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளாள். அதை அதிகாரப்பாடாக படவரியில் (இன்ஸ்டாகிராம்) சஞ்சீவ் அறிவித்துள்ளார். “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் வாழ்த்துகள் எங்களின் வாழ்க்கை. தாய் மற்றும் மகள் இருவரும் நலமாக இருக்கின்றனர். பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி" என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார் சஞ்சீவ். சஞ்சீவ் அல்யா மானசா இணையருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் கொண்டாடிகள் (இரசிகர்கள்).

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.